கனடாவில் இலங்கை தேசிய கீதத்தை பாடியபடி கோட்டாபயவுக்கு எதிராக மக்கள் போராட்டம்! வீடியோ காட்சி
கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் அதிபர் கோட்டாபயவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் அதிபர் கோட்டாபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Protest in Toronto, Canada ?? #LKA #SriLankaCrisis #SriLanka pic.twitter.com/VSrOxXJ3nM
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) April 4, 2022
இதையும் படிங்க: கனடாவில் எரிக்கப்பட்ட நிலையில் வீட்டில் கிடந்த பெண்ணின் சடலம்! சிக்கிய கணவர்
கோட்டாபய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. போராட்டங்கள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டாபயவுக்கு எதிராக கனடாவின் ரொறன்ரோவில் வசிக்கும் இலங்கையர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தின் போது அவர்கள் இலங்கை தேசிய கீதத்தை பாடினார்கள்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.