ஹமாஸ் தலைவர் படுகொலை... ரகசியமாக ஆட்டத்தைத் தொடங்கிய ஈரான்
தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ள ஈரான், சந்தேக நபர்கள் என டசின் கணக்கானோரை கைது செய்துள்ளது.
ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கை
இதில், மூத்த உளவுத்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஹனியே படுகொலை செய்யப்பட்ட தெஹ்ரானில் இராணுவத்தால் நடத்தப்படும் விருந்தினர் மாளிகையின் பணியாளர்கள் என கைதாகியுள்ளனர்.
ஹனியே படுகொலை தொடர்பான விசாரணையை புரட்சிகரப் படையே முன்னெடுத்துள்ளது. இஸ்மாயில் ஹனியே படுகொலையானது ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பேரிடியாகவே பார்க்கப்படுகிறது.
மட்டுமின்றி, ஈரானில் வெளிநாட்டு உளவாளிகள் ஊடுருவியுள்ளதையும் இந்த விவகாரம் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், குறித்த சம்பவமானது ஈரானுக்கும் அதன் ஆதரவு நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே நிபுணர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக
இஸ்மாயில் ஹனியே படுகொலை தொடர்பில் இதுவரை இஸ்ரேல் கருத்தேதும் தெரிவிக்கவில்லை, ஆனால் அமெரிக்கா இதில் ஈடுபடவில்லை என உறுதி அளித்துள்ளது,
மட்டுமின்றி, இஸ்ரேல் தரப்பு மீதே சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது வெளியான தரவுகளின் அடிப்படையில், கன்காணிப்பு கமெரா காட்சிகளை ஈரான் நிர்வாகம் கைப்பற்றியுள்ளதாகவும், டசின் கணக்கானோரை கைது செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் உட்பட யேமனின் ஹூதிகள் மற்றும் ஹமாஸ் படைகள் ஹனியே கொலைக்கு இஸ்ரேலுக்கு எதிராக பழிவாங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |