அவுஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு..இனவெறி பிடித்தவர் என கர்ஜித்த செனட்டர்
அவுஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது.
புர்கா அணிந்து வந்த தலைவர்
One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும் முழங்காலுக்கு மேல் வெட்டப்பட்ட ஆடையுடன் வந்தார். 
அவர் புர்காக்கள் முழு முகத்தையும் மூடுவதை தடை செய்யும் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் அவரது செயலைக் கண்டித்த செனட்டர் மெஹ்ரீன் ஃபரூகி,
"உடை கட்டுப்பாடு என்பது செனட்டர்களின் தேர்வாக கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், இனவெறி என்பது செனட் சபையின் தேர்வாக கண்டிப்பாக இருக்கவே கூடாது. இந்த இனவெறி பிடித்த செனட்டர், அப்பட்டமான இனவெறி மற்றும் இஸ்லாமிய வெறுப்பைக் காட்டுகிறார்" என்று சீறினார். 
அதேபோல் ஹிஜாப் அணிந்திருந்த சுயேட்சை செனட்டர் பாத்திமா பேமனும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
சூடான விவாதம்
பின்னர் நடந்த சூடான விவாதத்தைத் தொடர்ந்து, ஹான்சனை செனட்டில் இருந்து இடைநீக்கம் செய்ய வாக்களித்தனர்.
பொருத்தமான ஆடைகளை மாற்றிக்கொள்ள செனட் தலைவர் உத்தரவிட்டார். வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஹான்சனை இடைநீக்கம் செய்ய செனட் எடுத்த முடிவு 'சரியான முடிவு' என்று அவர் கூறினார்.
இதற்கிடையில் ஹான்சன் தனது தீர்மானத்தில் பேசவோ, விவாதிக்கவோ முடியவில்லை. அவர் அறையைவிட்டு வெளியேற உத்தரவிட்ட சிறிது நேரத்திலேயே செனட் இடைநீக்கம் செய்யப்பட்டது. 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |