லேண்டர் தரையிறங்கும் போது நிலவில் இதுதான் நடந்தது: இஸ்ரோ கூறும் பதில்
நிலவில் சந்திராயன் விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும் போது நடந்த நிகழ்வுகள் குறித்து இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
மேலும், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்றும், நிலவை அடைய 40 நாள்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
இதில் மொத்தமாக 14 நாள்கள் லேண்டரும், ரோவரும் நிலவின் மேற்பரப்பையும், ரசாயன தன்மையையும் ஆய்வு செய்து பல்வேறு தகவல்கள் கொடுத்தன.
இஸ்ரோ கூறியது
நிலவில் லேண்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இஸ்ரோ தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "பொதுவாக விண்கலன்கள் நிலவில் தரையிறங்கும் போது அதன் மேற்பரப்பில் உள்ள மண் மற்றும் துகள்கள் மேலெழும்பும்.
சந்திராயன் விண்கலத்தில் லேண்டர் கலன் நிலவில் தரையிறங்கும் போது 2.06 டன் மண் துகள் மற்றும் ரசாயன துகள்கள் வெளியேறி 108.4 மீட்டர் பரப்பளவுக்கு தரைப்பரப்பு தெளிவாக உருவானது" என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |