உலக கோப்பையை தோனி மட்டும் தனி ஆளா நின்று ஜெயிக்கல - ஹர்பஜன் சிங் காட்டம்
உலக கோப்பையை தோனி மட்டும் தனி ஆளா நின்று ஜெயிக்கல, 10 வீரர்கள் சேர்ந்து ஆடிதான் ஜெயிச்சாங்க என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் காட்டமாக டுவிட் செய்துள்ளார்.
இந்தியாவின் மோசமான தோல்வி
சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியோடு மோதிய இந்திய அணி படு மோசமாக தோல்வியை அடைந்தது.
சில வருடங்களாக விராட் கோலியால் தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என்று பேசி வந்த நிலையில், தற்போது ரோஹித் சர்மா தலையில் இந்திய அணி மோசமான விளையாட்டை விளையாடி வருகிறது என்று சமூகவலைத்தளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த கேப்டன் தோனி. சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கூட கேப்டன் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாபெரும் வெற்றி பெற்றது.
ஹர்பஜன் சிங் காட்டமான டுவிட்
தோனி போல ஒரு நல்ல கேப்டன் கிடைக்க மாட்டாங்க. இந்திய அணிக்கு தோனி போல் ஒரு கேப்டன் கிடைப்பாரா என்று பலரும் இணையதளங்களில் இந்தியாவின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைப் பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் காட்டமாக டுவிட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ஆமாம்.. இப்போட்டிகளை இந்தியாவிலிருந்து ஒரு இளம் வீரர் மட்டும் தான் ஆடினார். மீதம் இருந்த 10 வீரர்கள் ஆடவே இல்லையா. தோனி மட்டும்தான் வென்றாரா... ஆஸ்திரேலியா உலகக்கோப்பையில் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது என்று தலைப்பு செய்திகளில் வரும்.
அதுவே இந்தியா வெற்றி பெற்றால், கேப்டன் வென்று கொடுத்தார் என்று கூறுவார்கள். கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு அதில் 10 வீரர்களும் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். வெற்றி பெற்றால் 10 பேரும் வெற்றி பெறுகிறோமோ, அதுபோல், தோல்வி அடைந்தால் 10 பேரும் தோல்வி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஆமாம்... இவர் சொல்வது உண்மைதான். கேப்டனை மட்டும் தூக்கி வைத்து பேச முடியாது. மற்ற வீரர்களும் கடுமையாகதான் விளையாடுகிறார்கள் என்று கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
Yes when these matches were played this young boy was playing alone from india.. not the other 10 .. so alone he won the World Cup trophies .. irony when Australia or any other nation win the World Cup headlines says Australia or etc country won. But when indian wins it’s said… https://t.co/pFaxjkXkWV
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 11, 2023