பட்டையை கிளப்பிய பாண்ட்யா! அடித்து நொறுக்கிய கிஷன்..மீண்ட இந்திய அணி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக்கோப்பை போட்டியில் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசினர்.
சரிந்த தொடக்க விக்கெட்டுகள்
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி பல்லேகேலேவில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாட்டத்தை துவங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா (11), கில் (10), கோலி (4) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (14) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் சீட்டுக்கட்டுபோல் சரிந்தனர்.
BCCI (twitter)
இதனால் இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கணிப்புகளை தவிடுபொடியாக்கும் வகையில் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் அமைந்தது.
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். கிஷன் 81 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்ட்யா 87 ஓட்டங்கள் விளாசல்
அதன் பின்னர் பவுண்டரிகளை விரட்டிய பாண்ட்யா 87 (90) ஓட்டங்கள் விளாசி வெளியேறினார். இவர்கள் இருவரும் 138 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
BCCI (twitter)
அடுத்த வந்த வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 266 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஷஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
Twitter (@TheRealPCB)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |