ரோகித், கோலி போல்டு! இந்திய அணியின் தூண்களை உடைத்த ஷஹீன்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆட்டமிழந்துள்ளனர்.
ரோகித் சர்மா கிளீன் போல்டு
பல்லேகேலவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
ஐந்தாவது ஓவரின் 2வது பந்து வீசப்பட்டபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து மழை நின்றதால் ஆட்டம் தொடர்ந்தது.
ஷஹீன் அஃப்ரிடி வீசிய ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா கிளீன் போல்டு ஆனார். அவர் 11 ஓட்டங்களில் வெளியேறியதைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார்.
Twitter (TheRealPCB)
கோலி அவுட்
நசீம் ஷா ஓவரில் பவுண்டரி அடித்து கோலி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் ஷஹீன் வீசிய அடுத்த ஓவரிலேயே இன்சைடு எட்ஜ் ஆகி கோலியும் போல்டு ஆனார்.
இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதனைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி விளையாடி வருகிறார்.
Twitter (TheRealPCB)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |