பவுண்டரியுடன் தொடங்கிய ரோகித்..மழையால் தடைபட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டி
ஆசியக்கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி 5வது ஓவரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று பல்லேகேலேவில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Pallekele Ground gets ready to host the epic showdown between India ?? and Pakistan ?? today! #AsiaCup2023 #INDvSL pic.twitter.com/KTrsTmSZAk
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 2, 2023
ஷஹீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரோகித் பவுண்டரி விளாசினார். அதன் பின்னர் நசீம் ஷா தாக்குதல் பந்துவீச்சை தொடுக்க கில் தடுமாறினார்.
Twitter (ICC)
மழை குறுக்கீடு
எனினும் 3வது ஓவரில் ரோகித் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார். அணியின் ஸ்கோர் 4.2 ஓவரில் 15 ஆக இருந்தபோது திடீர் மழை பொழிந்தது.
இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ரோகித் 11 (18) ஓட்டங்களுடனும், கில் ஓட்டங்கள் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். மழையின் குறுக்கீடினால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Twitter (@TheRealPCB)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |