மனைவியை விட்டு பிரிந்தாரா ஹர்திக் பாண்டியா ? தீயாய் பரவும் தகவல்
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன், இந்திய அணியின் துணை கேப்டனுமாகிய ஹர்திக் பாண்டியா தனது மனைவியை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
மனைவியை பிரிந்தாரா ஹர்திக் பாண்டியா?
கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்று செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் (Nataša Stanković) என்பவரை ஹர்திக் பாண்டியா திருமணம் செய்துக்கொண்டார்.
அதே வருடத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அவர்களுடைய காதல் வாழ்கையை பலரை கவர்ந்தது.
சமூக வலைத்தளத்தில் அவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியாக இருந்து வந்தார்கள்.
நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை பார்க்க மனைவி நடாஷா வரவில்லையாம்.
சமீக காலமாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதில்லை. பிறந்தநாள் அன்று கூட ஒரு பதிவும் வெளியிடவில்லை.
Natasa Stankovic Pandya என இன்ஸ்டாவில் பெயர் வைத்து இருந்த அவர், தற்போது பாண்டியா என்பதை மட்டும் நீக்கியுள்ளார்.
ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் நீக்கியுள்ளார்.
இதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டார்கள் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.
இருப்பினும் இது குறித்து அவர்கள் இருவரும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |