உடற்தகுதியை நிரூபித்து அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா: டி20 அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா
டிசம்பர் 9ஆம் திகதி தொடங்கும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த அணியில் ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
அவர் சையத் முஷ்தாக் அலி டிராபி போட்டியில் தனது உடற்தகுதியை நிரூபித்த பிறகு, மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
கில் இருப்பாரா?
முன்னதாக, ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை, மேலும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தையும் தவறவிட்டார்.
இதற்கிடையில், துணைத்தலைவராக சுப்மன் கில் (Shubman Gill) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் விளையாடுவது பிசிசிஐயின் COE உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டது ஆகும். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |