31 வயதிலும் ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இருப்பதற்கு என்ன காரணம்? அவர் தினமும் சாப்பிடும் உணவு இது தான்
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பின்பற்றி வரும் உணவு முறை குறித்த தகவலை இப்போது விரிவாக பார்க்கலாம்.
உணவு முறை
பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா தனது உடல் மற்றும் செயல்திறனை பாதுகாக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்கிறார். முக்கியமாக அவரது உணவில் புரதங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை இருக்கும்.
இதுகுறித்த விவரங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதன் மூலம் முழு விவரங்கள் தெரியவந்துள்ளது.
அவர் காலையில் எழுந்ததும் 500 மில்லி தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி மையத்திற்கு செல்கிறார். பின்னர், காலை உணவாக சுமார் 650 கலோரிகள் மற்றும் 30 கிராம் புரதம் நிறைந்த ஸ்மூத்தியை உண்கிறார்.
அதில் முக்கியமாக சூரியகாந்தி விதைகள், ஓட்ஸ், வெண்ணெய், பாதாம், பாதாம் பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிட தான் அவருக்கு பிடிக்குமாம்,
இதையடுத்து மதிய உணவிற்கு முன்பு தண்ணீரில் ஒரு ஃபிஸி ஆப்பிள் சைடர் வினிகர் (ACV) கலந்து குடிக்கிறார். இது அவருக்கு, பசியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் சுவையாகவும் இருக்கிறது.
அடுத்ததாக மதிய உணவிற்கு 550 கலோரிகள் மற்றும் 24 கிராம் புரதம் அடங்கிய சீரக அரிசி, கீரை மற்றும் பருப்பு அடங்கிய எளிய உணவை சாப்பிடுகிறார்.
பின்னர், மாலையில் பயிற்சி முடித்தவுடன் ஓட்ஸ் சாப்பிடுகிறார். கடைசியாக இரவில் டோஃபு மற்றும் அரிசியுடன் கூடிய ஆசிய பச்சை உணவுகளை எடுத்துக் கொள்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |