பாகிஸ்தான் வீரரை கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்டியா! ரசிகர்களைக் கவர்ந்த அழகான நட்பு
இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
அவர் ஆட்டத்திற்கு இடையில், எதிரணியின் விக்கெட் கீப்பரை கட்டிப்பிடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஆசிய கோப்பை போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின்போது ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வானை பின்னால் இருந்து கட்டிப்பிடித்தது ரசிகர்களின் மனதையும் வென்றது.
ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியா முன் தலைவணங்கிய தினேஷ் கார்த்திக்... வைரல் வீடியோ
மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது முதல், 17 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்து, ஹர்திக் தனது அதிரடியான சிக்ஸர் மூலம் இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்தார்.
ஆட்டத்தின் போது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வானை ஹர்திக் பின்னால் இருந்து கட்டிப்பிடித்த போது, அவரது அபாரமான ஆட்டத்தை தவிர, இரு அணியின் ரசிகர்களின் மனதையும் வென்றது.
இந்த படம் விரைவில் சமூக ஊடகங்களில் வைரலானது மற்றும் இரு நாட்டு வீரர்களின் அழகான நட்புக்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டுக்களை வெளிப்படுத்தியத்தைக் காணமுடிந்தது.
இதையும் படிங்க: கோலியின் 100வது போட்டியில் வெற்றி! வாழ்த்து கூறிய மிஸ்டர் 360
துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆசிய கோப்பை குரூப் ஏ மோதலில் இந்திய அணி பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படு இந்தியாவின் இலக்கான 148 ஓட்டங்களைத் துரத்த 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என 33 ஓட்டங்கள் எடுத்தார்
குரூப் ஏ மோதலில் இந்திய அணி அடுத்ததாக ஹாங்காங்கை எதிர்த்து ஆகஸ்ட் 31-ஆம் திகதி (புதன்கிழமை) மோதுகிறது.