ஆகாஷ் அம்பானியை கதிகலங்க வைத்த ஹர்திக் பாண்டியா., AI ரோபோ நாயால் நடந்த வேடிக்கை
AI ரோபோ நாயை வைத்து ஹர்திக் பாண்டியா ஆகாஷ் அம்பானியை பயமுறுத்திய வேடிக்கையான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2025 சீசன் ரசிகர்களை அசத்தும் புதிய உறுப்பினராக, நான்கு கால்கள் கொண்ட AI ரோபோ நாய் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த உயர் தொழில்நுட்ப நாய்க்குட்டி, Champak என அழைக்கப்படுகிறது. இது குரல் கட்டுப்பாடுகள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும்.
இந்த ரோபோ நாய் தனது முன்னங்கால்களால் இதயம் வடிவம் வரைந்துக் காட்டும் திறன் உடையது. மேலும், விளையாட்டு வீரர்களுடன் கை குலுக்குவது போன்று பல செயல்களை தன்னிச்சையாக செய்யும்.
மும்பையில் நடைபெற்ற MI மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டிக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி இடையே நடந்த வேடிக்கையான தருணம் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.
வான்கடே ஸ்டேடியத்தில், பாண்டியா அந்த ரோபோ நாயை இயக்க முயற்சிக்க, ஆகாஷ் அவருக்கு உதவி செய்தார்.
ஆனால் தவறுதலாக ஒரு பொத்தானை அழுத்திய பாண்டியா, ரோபோ நாயை நேரடியாக ஆகாஷ் நோக்கி குதிக்க வைத்தார்.
அதனை கண்ட ஆகாஷ் அம்பானி சற்றே பீதி அடைந்தாலும், பின்னர் இருவரும் சிரித்தனர். இந்த வீடியோ தற்போது 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
Areyy Idhi remote control kukka naa 🤣, nenu inni rojulu robo kukka anukuntunna pic.twitter.com/SL4RoNQ1qO
— EpicCommentsTelugu (@EpicCmntsTelugu) April 21, 2025
ஐபிஎல் மட்டுமல்லாது, இந்த Champak ரோபோ நாய் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல டெக்னாலஜி சார்ந்த புதுமைகள் கிரிக்கெட்டில் சேரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |