சறுக்கி கீழே விழுந்து கேட்சை தவறவிட்ட ஹர்திக் பாண்டியா! லக்கை பயன்படுத்தி விளாசிய பேட்ஸ்மேன்: வீடியோ
ஐபிஎல் போட்டியில் முக்கியமான தருணத்தில் ஹர்திக் பாண்டியா ஒரு கேட்ச்சை கோட்டை விட்டுள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-ன் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 188 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் 39 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து திணறி கொண்டிருந்தார்.
அப்போது யாஷ் தயல் போட்ட பந்தை லாங் ஆப் திசை நோக்கி ஜோஸ் அடிக்க ஹர்திக் பாண்டியா கைக்கு எளிதான கேட்சாக அது சென்று கொண்டிருந்தது. ஆனால் பாண்டியா திடீரென சறுக்கி கீழே விழ பந்து அவரை தாண்டி பவுண்டரிக்கு சென்றது.
Hardik Pandya Slips, Jos Buttler Survives
— Riddhi Shah (@RiddhiTweets_) May 24, 2022
Cricket Updates Follow @SportsCorner_IN
Joss the Boss#IPL2022 #RRvGT #GTvRR #RRvsGT #GTvsRR pic.twitter.com/N3bTK7xByQ
அந்த கேட்சை கோட்டை விட்டதற்கு குஜராத் அணி மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் பின்னர் அதிரடியாக ஆட தொடங்கிய பட்லர் 56 பந்துகளில் 89 ரன்களை குவித்தார்.
இதன்மூலமே அணியின் ஸ்கோர் 188 ஆக உயர்ந்தது. பின்னர் விளையாடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
பாண்டியா அந்த கேட்சை பிடித்திருந்தால், குஜராத்தின் வெற்றி இன்னும் சுலபமாகியிருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.