அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸை ஆட்டம்காண வைத்த பாகிஸ்தான் வீரர்: அடித்து நொறுக்கிய ஸ்டோய்னிஸ்
பிக் பாஷ் லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது.
மேத்யூ ஷார்ட் 56 ஓட்டங்கள்
மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது.
டாம் கர்ரனின் மிரட்டலான பந்துவீச்சில் கிறிஸ் லின், ஜேசன் சங்கா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
🇵🇰 Haris Rauf took 3-28 in a super spell at Adelaide Oval! #BBL15 pic.twitter.com/2UPryISCQ7
— KFC Big Bash League (@BBL) December 23, 2025
எனினும், அணித்தலைவர் மேத்யூ ஷார்ட் (Matthew Short) அதிரடியாக 42 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்தார். லியாம் ஸ்காட் 25 (19) ஓட்டங்களும், ரோஸ் 22 (21) ஓட்டங்களும் எடுத்தனர்.

ஹார்பர் விளாசல்
பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப்பின் (Haris Rauf) அபார பந்துவீச்சில் கடைசி கட்ட விக்கெட்டுகள் சரிய, அடிலெய்டு அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. டாம் கர்ரன், ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளும், சிடில் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஜோ கிளார்க் 23 ஓட்டங்களில் வெளியேற, சாம் ஹார்பர் (Sam Harper) அரைசதம் அடித்தார். அவர் 36 பந்துகளில் 55 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார். கெல்லாவே 28 (22) ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

மேக்ஸ்வெல் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சொதப்பினார். எனினும், அணித்தலைவர் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) அபாரமாக ஆடி 22 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாச, மெல்போர்ன் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
That Lloyd Pope wrong'un 😋
— KFC Big Bash League (@BBL) December 23, 2025
How good is that! #BBL15 pic.twitter.com/e3OSakFcRZ
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |