ஒரு தாயின் 31 ஆண்டு போராட்டம்.. பேரறிவாளன் விடுதலை உண்மையான வெற்றி: பிரபல இளம் நடிகர்
30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது ஒரு தாயின் 31 ஆண்டு போரட்டத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 31 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பிறகு அவர் விடுதலையாகியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இளம் நடிகர் ஹரிஷ் கல்யாணும் தனது ட்விட்டர் பக்கத்தில் 'வரலாற்று தீர்ப்பளித்ததற்கு உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. ஒரு தாயின் 31 வருட உண்மையான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி #அற்புதம்மாள்' என பதிவிட்டுள்ளார்.
#PerarivalanRelease ?? Thanks to SC for the historic judgement. ஒரு தாயின் 31 வருட உண்மையான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி #Arputhammal ?
— Harish Kalyan (@iamharishkalyan) May 18, 2022