பாகிஸ்தானுக்கு வீராங்கனையின் நெருக்கடி: அவசரத்தால் தவறவிட்ட அரைசதம்..முதல்முறையாக ஆல்அவுட்
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஹர்லீன்
கொழும்பில் நடந்து வரும் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
𝐇𝐚𝐫𝐥𝐞𝐞𝐧 𝐃𝐞𝐨𝐥 𝐢𝐧 𝐟𝐮𝐥𝐥 𝐟𝐥𝐨𝐰! 🙌
— Female Cricket (@imfemalecricket) October 5, 2025
A boundary to start and a massive six to follow!🏏🔥#CricketTwitter #CWC25 #INDvPAKpic.twitter.com/AMhpkOyRF1
ஸ்மிருதி மந்தனா 23 ஓட்டங்களிலும், பிரதிகா ராவல் 31 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க ஹர்லீன் தியோல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிக்ஸரை பார்க்கவிட்ட அவர் அரைசதம் நோக்கி நகர்ந்தார். ரமீன் ஷமீம் ஓவரில் சிக்ஸர் அடிக்க இறங்கி வந்து ஷாட் அடித்தார்.
ஆனால், சரியாக துடுப்பில் கிளிக் ஆகாத பந்து நஷ்ரா சந்துவிடம் கேட்ச் ஆனது. இதனால் ஹர்லீன் 46 ஓட்டங்களில் (1 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.
ரிச்சா கோஷ் அபாரம்
ஜெமிமா ரோட்ரிகஸ் 32 (37) ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 25 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ருத்ர தாண்டவமாடினார்.
20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் இந்திய அணி 50 ஓவரில் 247 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக இந்திய அணி ஆல்அவுட் ஆகியுள்ளது.
டயானா பெய்க் 4 விக்கெட்டுகளும், சாதியா இக்பால் மற்றும் பாத்திமா சனா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |