619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்தார்.
ரவீந்திர ஜடேஜா
அகமதாபாத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சதம் விளாசிய ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர் என்ற புதிய சாதனையை ஜடேஜா படைத்தார்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே (Anil Kumble) 9 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருந்த நிலையில், ஜடேஜா 10வது முறையாக பெற்று அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
அதிகமுறை ஆட்டநாயகன் விருதுபெற்ற வீரர்கள் (இந்தியாவில்)
- ரவீந்திர ஜடேஜா - 10
- அனில் கும்ப்ளே - 9
- விராட் கோஹ்லி - 8
- சச்சின் டெண்டுல்கர் - 8
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |