தாய் உடன் செய்த ஒப்பந்தம் - முச்சதம் விளாசிய இந்திய வம்சாவளி வீரர் ஹர்ஜாஸ் சிங்
அவுஸ்திரேலியாவில் நேற்று வெஸ்டர்ன் சபர்ப்ஸ் மற்றும் சிட்னி அணிகளுக்கு இடையேயான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
முச்சதம் விளாசிய இந்திய வம்சாவளி வீரர்
இதில், வெஸ்டர்ன் சபர்ப்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த அவுஸ்திரேலிய வீரரான ஹர்ஜாஸ் சிங் 141 பந்துகளில் 314 ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
முதலில் நிதானமாக ஆடிய ஹர்ஜாஸ் சிங், 74 பந்துகளில் சதம் விளாசியதும், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில், 141 பந்துகளில் 35 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் உட்பட 314 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில், 252 ஓட்டங்கள் பவுண்டரி மூலம் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த சிக்ஸர்கள் மூலம், 2000 அவுஸ்திரேலியா டொலர்கள் மதிப்பிலான பந்துகளை மைதானத்திற்கு வெளியே அனுப்பி தொலைத்ததாக கூறப்படுகிறது.
Dead set carnage from Harjas Singh for Wests today. https://t.co/i6CjWS03K1 pic.twitter.com/vyTnwzWRma
— Tom Decent (@tomdecent) October 4, 2025
இதன் மூலம் கிரேடு-லெவல் கிரிக்கெட்டில் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வடிவத்தில் முச்சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹர்ஜாஸ் சிங் பெற்றுள்ளார்.
இவரின் அதிரடி முச்சதம் காரணமாக வெஸ்டர்ன் சபர்ப்ஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 483 ஓட்டங்கள் குவித்தது.
நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிரிக்கெட் வரலாற்றில் இது 3வது தனிநபர் அதிகபட்சமாகும். முன்னதாக விக்டர் டிரம்பர் 335 ஓட்டங்களும், பில் ஜாக்ஸ் 321 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.
ஹர்ஜாஸ் சிங், இந்தியாவிற்கு எதிராக U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 64 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அசத்தினார்.
தாய் உடன் ஒப்பந்தம்
இது குறித்து பேசிய ஹர்ஜாஸ் சிங், "நான் போட்டி இல்லாத நேரங்களில் பவர்ஹிட்டிங்ற்காக அதிகம் உழைத்தேன். அது தற்போது பலன் அளித்துள்ளது. இதனை நினைத்து பெருமை படுகிறேன்.சதத்திற்கு பின் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்க விரும்பினேன்.
இந்த போட்டிக்கு முன்னர் என் தாயிடம் இந்த போட்டியில் சதம் அடித்தால் உங்கள் காரை ஓட்ட அனுமதிப்பீர்களா என கேட்டேன். அதற்கு வாயை மூடு என கூறினார். இந்த சதம் அடித்ததே எனக்கு போதும்" என கூறினார்.
இவரின் பெற்றோர் இந்தியாவின் சண்டிகர் நகரை பூர்விகமாக கொண்டவர்கள். 2000 ஆம் ஆண்டு சிட்னிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவரின் தந்தை பஞ்சாபில் மாநில குத்துச்சண்டை சாம்பியனாக இருந்துள்ளார். அவரது தாயார் மாநில அளவிலான நீளம் தாண்டுதல் வீரராக இருந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |