150வது போட்டியில் களமிறங்கிய கேப்டன்! இதுவரை மூவர் மட்டுமே..அந்த இருவர் யார்?
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதன் மூலம், இந்திய அணிக்காக 150வது போட்டியில் விளையாடும் மூன்றாவது வீராங்கனை எனும் பெருமையை பெற்றார் ஹர்மன்பிரீத் கவுர்.
ஹர்மன்பிரீத்
மகளிர் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
A landmark for Harmanpreet Kaur — 150 ODIs! 🙌
— Female Cricket (@imfemalecricket) September 14, 2025
4069 runs, 31 wickets, and countless match-winning memories! 🏏#CricketTwitter #INDvAUS pic.twitter.com/6ivkBhx9cD
இது இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுருக்கு (Harmanpreet Kaur) 150வது ஒருநாள் போட்டியாகும்.
இதன்மூலம் இந்திய அணிக்காக 150வது போட்டியில் விளையாடும் மூன்றாவது வீராங்கனை எனும் சிறப்பை பெற்றுள்ளார்.
இதற்கு முன் மித்தாலி ராஜ் (Mithali Raj) மற்றும் ஜுலன் கோஸ்வாமி (Jhulan Goswami) ஆகியோர் மட்டுமே 150 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்.
இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீராங்கனைகள்
- மித்தாலி ராஜ் - 232 போட்டிகள்
- ஜுலன் கோஸ்வாமி - 204 போட்டிகள்
- ஹர்மன்பிரீத் கவுர் - 150 போட்டிகள்
- அஞ்சும் சோப்ரா - 127 போட்டிகள்
- அமிதா ஷர்மா - 116 போட்டிகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |