50 பந்துகளில் 80 ரன் குவித்த ஜோஷ் பிரவுன்! அதேபோல் பதிலடியாக 84 ரன் விளாசிய எதிரணி வீரர்
மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி நிர்ணயித்த 167 ஓட்டங்கள் இலக்கினை, மெல்போர்ன் ஸ்டார்ஸ் 15.5 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது.
ஜோஷ் பிரவுன் 80 ஓட்டங்கள்
டாக்லேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
The ball has hit the roof!
— KFC Big Bash League (@BBL) January 10, 2026
Jake Fraser-McGurk tried to go BIG off Marcus Stoinis, but he hit the roof at Marvel Stadium. #BBL15 pic.twitter.com/lZSU2Ra4kt
முதலில் ஆடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் 166 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஜோஷ் பிரவுன் (Josh Brown) 50 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாசினார்.
ஹஸன் கான் 23 ஓட்டங்களும், ரிஸ்வான் 21 ஓட்டங்களும் விளாச மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Image: @BBL/X
ஹார்பர், ரோஜர்ஸ் கூட்டணி
பின்னர் களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் சாம் ஹார்பர் மற்றும் தாமஸ் ரோஜர்ஸ் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்தது.
"Small man, massive hit!"
— KFC Big Bash League (@BBL) January 10, 2026
Sammy Harper LAUNCHED this delivery into the top deck of Marvel Stadium 💥 #BBL15 pic.twitter.com/r4rNPYCdbz
தாமஸ் ரோஜர்ஸ் 53 (24) ஓட்டங்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) குவித்து ஆட்டமிழக்க, ருத்ரதாண்டவம் ஆடிய சாம் ஹார்பர் (Sam Harper) ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 84 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
Tom Rogers has just hit the equal-second-fastest 50 in Melbourne Stars history! #BBL15 pic.twitter.com/16p6waCRRH
— KFC Big Bash League (@BBL) January 10, 2026
Image: @BBL/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |