இளவரசர் ஹரி மற்றும் மேகன் தங்களது சொந்த கருத்துகளிலேயே முரண்பாடு: குழம்பி நிற்கும் Netflix அதிகாரிகள்
நெட்ஃபிக்ஸ் தொடருக்காக ஹரி மற்றும் மேகன் தெரிவித்த கருத்துகளில் முரண்பாடு.
ஹரி மற்றும் மேகனின் ஆவணப்படத்தை டிசம்பரில் வெளியிட நெட்ஃபிக்ஸ் நிறுவனம் முடிவு.
இளவரசர் ஹரி தனது வரவிருக்கும் புத்தகத்தில் தெரிவித்துள்ள சில கருத்துகள், அவர் நெட்ஃபிக்ஸ் தொடருக்காக தெரிவித்த கருத்துகளில் இருந்து முரணாக இருப்பதால் ஒளிபரப்பு நிறுவன அதிகாரிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
Netflix தளத்திற்காக உருவாக்கப்பட்ட இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தொடர்பான ஆவணப் படத்தில் சில மாற்றங்களை செய்யவும், அதன் வெளியீட்டு திகதியை மாற்றி வைக்கவும் தி டியூக் மற்றும் டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் விரும்புவதாக கடந்த வாரங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
GETTY
இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஜோடி Netflix ஸ்ட்ரீமிங் தளத்திற்காக 2020 ஆம் ஆண்டு பல மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ஆவணப்படத்தில் ஒப்பந்தமாகி இருந்த நிலையில், புரூக்ளின் இயக்குனர் லிஸ் கார்பஸுடன் 1 வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட சசெக்ஸ் தம்பதி, மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மற்றும் குயின் கான்சார்ட் கமீலா உட்பட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தொடர்பாக கேமராவில் நிறைய பேசி இருப்பதாக நம்பப்படுகிறது.
அவற்றில் மிகவும் சிக்கலான மற்றும் நெருடலான சில முக்கிய கருத்துகளை இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகள் நீக்க கடந்த வாரங்களில் முயற்சித்து வருகின்றனர்.
GETTY
இந்நிலையில் இளவரசர் ஹரியின் வரவிருக்கும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் சில, அவரும் அவரது மனைவி மேகனும் காட்சி தொடருக்காக கேமராவில் சொன்ன கருத்துடன் முரணாக இருப்பதால் நெட்ஃபிக்ஸ் மற்றும் தொடரின் தயாரிப்பாளர்கள் குழப்பமடைந்து இருப்பதாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மூத்த நெட்ஃபிக்ஸ் ஆதாரம் வெளியிட்ட தகவலில், நிகழ்ச்சியில் ஹரி கூறிய கருத்துகள், அவர் புத்தகத்தில் எழுதியுள்ள கருத்துகளுடன் முரண்பட்டு உள்ளது என்பதால் இது நிச்சயமாக ஒரு பிரச்சனை என தெரிவித்துள்ளார்.
GETTY
இதற்கிடையில் நெட்ஃபிக்ஸ் தலைவர்கள் ஹரி மற்றும் மேகனின் ஆவணத் தொடரை நவம்பர் 5ம் திகதி தொடங்கும் “தி கரவுன்” தொடரின் ஐந்தாவது சீசனுக்கு பிறகு டிசம்பரில் வெளியிட வலியுறுத்தியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை: ஜோ பைடனுடனான சந்திப்பு குறித்து புடின் காட்டம்
தொடரை நெட்ஃபிக்ஸ் மற்ற மொழிகளுக்கு திருத்தவும், மொழிபெயர்க்கவும் வாரங்கள் எடுக்கும் என்பதால் அவர்கள் திருத்தத்தை மிக விரைவில் முடிக்க வேண்டியுள்ளது.