எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை: ஜோ பைடனுடனான சந்திப்பு குறித்து புடின் காட்டம்
இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு.
அமெரிக்க ஜனாதிபதி புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை புடின் கருத்து.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் காட்டமாக பதிலளித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போருக்கு மத்தியில் இந்தோனேசியாவின் பாலி தீவில் வரும் நவம்பர் 15 மற்றும் 16ம் திகதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, இந்தோனேசியா, பிரேசில், சீனா, ஜப்பான் போன்ற உலகின் முன்னணி நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
Source: www.g20.org
போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் உலக தலைவர்கள் சந்தித்து கொள்ளும் இந்த ஜி-20 உச்சி மாநாடு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதில் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆதரவு வழங்கி வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் பங்கேற்க உள்ளதால், உக்ரைன் பதற்றத்தை தணிக்க இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை எதுவும் எங்களுக்கு இல்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜோ பைடன் தயாரா? இல்லையா? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும், என்னை பொறுத்தவரை அவரிடம் பேசவேண்டிய தேவை எதுவும் இல்லை என ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஹரி மற்றும் மேகன் மார்க்கல் பிள்ளைகள் பட்டங்களை பெறுவார்களா? மன்னர் சார்லஸிடம் இளவரசர் கோரிக்கை
அத்துடன் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் எந்த நாட்டின் தலைவர்களுடனும் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை, ஆனால் ரஷ்யாவின் நட்பு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.