தாயார் டயானாவை கௌரவிக்க வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி: ஹரி, வில்லியம் குறித்த தகவல்
பிரித்தானிய இளவரசர்கள் ஹரி, வில்லியம் ஆகியோர் தங்கள் மறைந்த தாயார் டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரித்தானிய இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் இடையே மன வருத்தங்கள் இருந்தாலும், மறைந்த அவர்களின் தாயார் இளவரசி டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி
பிரித்தானிய இளவரசர்கள் பற்றிய Finding Freedom என்ற வரலாற்று நூலின் ஆசிரியர்கள் ஓமிட் ஸ்கோபி மற்றும் கரோலின் துராண்ட். இவர்கள் தற்போது இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் குறித்த தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் ஒருவருடனான உரையாடலை ஆசிரியர்கள் விவரித்துள்ளனர்.
அதாவது, 'இரு சகோதரர்களும் தங்கள் தாயின் பாரம்பரியத்தைத் தொடர்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளனர்.
மேலும், எந்த அளவு மன வருத்தங்களும் அதற்கு ஒருபோதும் தடையாக இருக்காது' என குறித்த நபர் தி இன்டிபென்டன்ட் பத்திரிகை மூலம் தெரிவித்தார்.
ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் இடையே மன வருத்தங்கள் இருந்தாலும், மறைந்த அவர்களின் தாயார் இளவரசி டயானாவை ஒன்றாக கௌரவிப்பதாக வாழ்நாள் முழுவதும் உறுதிமொழி எடுத்துள்ளதாகவும் அவர் கூறியதாக தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |