ஷாட் அடித்ததும் நழுவி விழுந்த பேட்.. செய்வதறியாமல் வெறுங்கையுடன் ஓடிய வீரர்.. வைரலாகும் வீடியோ
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் 51 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்தார்
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் 20 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பேட்-ஐ தவறவிட்டு ரன் ஓடியது நகைப்பை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பெர்த்தில் நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் குவித்தது. ஹேல்ஸ் 84 ஓட்டங்களும், பட்லர் 68 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களே எடுத்ததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக வார்னர் 73 ஓட்டங்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Cricket bats - who needs 'em? ?#AUSvENG pic.twitter.com/i5kCTZ5fym
— cricket.com.au (@cricketcomau) October 9, 2022
இந்தப் போட்டியில் இங்கிலாந்து ப்ரூக் ஆஃப் சைடு திசையில் ஷாட் அடிக்கும்போது, அவரது பேட் கை நழுவி கீழே விழுந்துவிட்டது. உடனே அவர் பேட்-ஐ எடுக்கலாம் என நினைக்க, மறுபுறம் மொயீன் அலி ரன் ஓட அழைக்கவே சில விநாடிகள் குழப்பத்திற்கு பின் பேட் இல்லாமல் ரன் எடுக்க ஓடினார்.
இந்த நிகழ்வு மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.