ஜோ ரூட்டை பின்னுத்தள்ளி முதலிடம் பிடித்த வீரர்: டாப் 10-யில் இரண்டு இலங்கை வீரர்கள்
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடம் பிடித்தார்.
ஹாரி புரூக்
2026 டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடம் பிடித்தார்.
ஹாரி புரூக் (Harry Brook) 869 புள்ளிகள் பெற்று சக அணி வீரர் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளினார்.
இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 853 புள்ளிகளுடன் உள்ளார்.
கமிந்து, சண்டிமல்
831 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய வீரரான ஸ்டீவன் ஸ்மித் 4வது இடத்தில் இருக்கிறார்.
இலங்கையின் ஆல்ரவுண்டர் வீரரான கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் (780), டெம்பா பவுமா (775), சுப்மன் கில் (743), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (733) முறையே 6 முதல் 9 இடங்களைப் பிடித்துள்ளனர். 10வது இடத்தினை இலங்கையின் தினேஷ் சண்டிமல் (Dinesh Chandimal) பிடித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |