ஹாட்ரிக் அடித்த ஹரி கேன்! கோல்மழையில் பாயெர்ன் இமாலய வெற்றி
பன்டெஸ்லிகா தொடரில் பாயெர்ன் முனிச் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ஓலிஸ் இரண்டு கோல்கள்
ஆலியன்ஸ் அரேனா மைதானத்தில் நடந்த போட்டியில் பாயெர்ன் முனிச் மற்றும் ஆர்பி லெய்ப்ஜிக் அணிகள் மோதின.
முதல் பாதியில் மைக்கேல் ஓலிஸ் இரண்டு கோல்களும் (27வது மற்றும் 42வது நிமிடம்), லூயிஸ் டயஸ் (Luis Diaz) ஒரு கோலும் (32வது நிமிடம்) அடிக்க பாயெர்ன் முனிச் 3-0 என முன்னிலை வகித்தது.
ஹாரி கேன் ருத்ர தாண்டவம்
இரண்டாம் பாதியில் நட்சத்திர வீரர் ஹாரி கேன் ருத்ர தாண்டவம் ஆடினார்.
64வது நிமிடத்தில் கோல் அடித்த அவர், 74 மற்றும் 77வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து மிரட்டினார்.
ஆர்பி லெய்ப்ஜிக் (RB Leipzig) அணியால் கடைசிவரை கோல் அடிக்க முடியாததால், பாயெர்ன் முனிச் (Bayern Munich) 6-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |