ஹாட்ரிக் ஹீரோவான ஹாரி கேன்! பாயெர்ன் முனிச் மிரட்டல் வெற்றி
பாண்டஸிலிகா போட்டியில் பாயெர்ன் முனிச் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஹோபன்ஹெய்ம் அணியை வீழ்த்தியது.
ஹாரி கேன் ஹாட்ரிக்
PreZero Arena மைதானத்தில் நேற்று நடந்த பாண்டஸிலிகா போட்டியில் பாயெர்ன் முனிச் மற்றும் ஹோபன்ஹெய்ம் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் பாயெர்ன் முனிச்சின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry Kane) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பில் 48வது நிமிடத்திலேயே மீண்டும் கோல் அடித்தார்.
பாயெர்ன் வெற்றி
அதன் பின்னரும் பாயெர்ன் முனிச் வீரர்கள் ஹோபன்ஹெய்ம் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். அதகளம் செய்த ஹாரி கேன் 77வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் (பெனால்டியில்) அடித்தார்.
ஹோபன்ஹெய்ம் அணிக்கு 82வது நிமிடத்தில் விளாடிமிர் கௌஃபால் மூலம் கோல் கிடைத்தது.
எனினும் செர்கே ஞார்பி (Serge Gnarby) 90+9வது நிமிடத்தில் கோல் அடிக்க, பாயெர்ன் முனிச் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |