ஜேர்மனி கிளப் அணிக்கு மாறிய இங்கிலாந்து கேப்டன் ஹரி கேன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..உற்சாகத்தில் ரசிகர்கள்
இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனான ஹரி கேன் ஜேர்மனியின் கிளப் அணியான பாயர்ன் முனிச் அணிக்காக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரி கேன்
டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து கேப்டன் ஹரி கேன், 103 மில்லியன் பவுண்டு தொகைக்கு பாயர்ன் முனிச் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
(John Walton/PA) (PA Wire)
இந்நிலையில் ஹரி கேன் பாயர்ன் முனிச் அணியில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாயர்ன் முனிச் அணியின் ட்விட்டர் பக்கத்தில் கேன் என பெயர் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் உடன் ஹரி கேன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
Welcome to #FCBayern, @HKane! ?⚪#ServusHarry
— FC Bayern Munich (@FCBayernEN) August 12, 2023
ட்விட்டர் பதிவு
மேலும் ஹரி கேன் பாயர்ன் முனிச் டி-ஷர்ட்டை அணிந்து இருக்கும் புகைப்படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், 'எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் முனிச்சில் அபாரமான வரவேற்பு! நம்ப முடியாத வரலாற்றைக் கொண்ட மிகப்பெரிய கிளப்பில் கையெழுத்திட்டுள்ளேன், தொடங்குவதற்கு காத்திருக்க முடியவில்லை!' என பதிவிட்டுள்ளார்.
Been an incredible welcome for me and my family in Munich in the last 24 hours! Buzzing to have signed for such a massive club with an incredible history, can't wait to get started! #miasanmia pic.twitter.com/4TjgCGJ70Z
— Harry Kane (@HKane) August 12, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |