இனி ஜேர்மனி அணிக்காக களமிறங்கும் ஹரி கேன்: ஒப்பந்தம் உறுதி
டோட்டன்ஹாம் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஹரி கேன் இனி ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பேயர்ன் முனிச் அணிக்காக ஒப்பந்தம்
ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தம் 103 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
@getty
30 வயதான ஹரி கேன் கடந்த 19 ஆண்டுகளாக வடக்கு லண்டன் அணிக்காக களமிறங்கி வருகிறார். இதனாலையே, 100 மில்லியன் பவுண்டுகளுக்கு குறைவான எந்த ஒப்பந்தமும் ஏற்க முடியாது என டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பேயர்ன் முனிச் அணிக்காக களமிறங்க இருப்பதால், மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொள்ள ஹரி கேன் ஜேர்மனிக்கு செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |