கோல் மழையில் வெற்றி! உலகக்கிண்ணத்தில் இடத்தை தக்கவைத்து இங்கிலாந்து..ஜாம்பவான் 75 கோல்கள்
லாட்வியா அணிக்கு எதிரான உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டியில், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
ஹாரி கேன்
ரிகாவின் டௌகவா மைதானத்தில் நடந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டியில் இங்கிலாந்து, லாட்வியா அணிகள் மோதின.
அந்தோணி கோர்டன் 26வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து ஜாம்பவான் ஹாரி கேன் (Harry Kane) 44வது நிமிடத்தில் கோல் அடித்தார். இது அவரது 75வது சர்வதேச கோல் ஆகும்.
அதன் பின்னர் 45+3வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மீண்டும் கோல் அடித்தார். லாட்வியா வீரர் மாக்சிம்ஸ் டோனிசெவ்ஸால் இங்கிலாந்து அணிக்கு (58வது நிமிடம்) கோல் கிடைக்க, எபெரெச்சி எஸி 86வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இமாலய வெற்றி
இறுதிவரை லாட்வியா அணியால் கோல் அடிக்க முடியாததால் இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
வெற்றிக்கு பின்னர் பேசிய ஹாரி கேன், "இப்போது நான் உணர்வதுபோல் எப்போதும் வேகத்தை குறைக்கப் போவதில்லை.
கோல்கள் உள்ளன, எண்கள் தங்களைப் பற்றிப் பேசுகின்றன. மைதானத்தில் நான் உணரும் விதம், நான் விளையாட்டைப் பார்க்கும் விதம், உடல் ரீதியாகவும், பந்து இல்லாமல், அழுத்தமாகவும் நான் ஒரு நல்ல இடத்தில் இருப்பதாக உணர்கிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |