ஹரி - மேகன் குழந்தையின் தோல் நிறம் குறித்து அரச குடும்ப நபரின் இனவெறி கருத்து! தம்பதி எடுத்த நிலைபாடு
இளவரசர் ஹரியும், மேகனுக்கு வழங்கப்படும் Robert F. Kennedy Ripple of Hope விருது நிகழ்ச்சியில் தம்பதியுடன் சேர்ந்து அமர்வதற்கான அனுமதி சீட்டின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விருது பெரும் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல்
அதன்படி ஹரி, மேகனுடன் இணைந்து பிரதான மேஜையில் உட்கார விரும்பும் விருந்தினர்கள் £840,000 (ரூ.36,60,74,300.00) வரை கட்டணமாக செலுத்த வேண்டும் என Express UK செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 6ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. அரச குடும்பத்தில் இனவெறிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததற்காக Robert F. Kennedy Ripple of Hope விருது ஹரி, மேகன் தம்பதிக்கு வழங்கப்படவுள்ளது.
Chris Jackson, Getty Images
ஆர்ச்சியின் தோல் நிறம் குறித்து கருத்து
அதாவது அரச குடும்பத்தை சேர்ந்த மூத்த நபர் ஒருவர் அப்போது பிறக்காத தங்கள் மகன் ஆர்ச்சியின் தோல் நிறம் குறித்து கருத்து தெரிவித்ததாக ஹரி - மேகன் தம்பதி Oprah Winfrey உடனான நேர்காணலில் முன்னர் கூறியிருந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் அரச குடும்பத்தை ஆதரித்து பேசிய இளவரசர் வில்லியம் நாங்கள் ஒரு இனவெறி குடும்பம் அல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
[Splash