ஹரி-மேகன் தம்பதியினர் அதிரடி: குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுத்த முக்கிய முடிவு
Harry Meghan Relocates children to new School: பாதுகாப்பு காரணங்களால் ஹரி-மேகன் தம்பதி தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர்.
இங்கிலாந்துக்கு திரும்பிய ஹரி-மேகன் தம்பதி
முக்கிய ராஜ கடமைகளில் இருந்து விலகிய சசெக்ஸ் இளவரசரான ஹரி மற்றும் இளவரசி மேகன் தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர்.
பெரும்பாலும் தனியாகவும், மிகவும் அரிதாகவே பிரித்தானியாவுக்கு வந்து சென்ற சசெக்ஸ் தம்பதி, தற்போது திரும்பவும் முழுமையாக பிரித்தானியாவில் குடியேறியுள்ளது.

இந்த நீண்ட கால திட்டம் தொடர்பாக பொது அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு மன்னர் சார்லஸுக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
ராஜாங்க குடியிருப்புகளில் இருந்து வெளியே தங்கியிருக்கும் இந்த தம்பதி, தற்போது அரசு சார்பிலான பொறுப்புகளில் எதிலும் இல்லாத ராஜ குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர்.
சசெக்ஸ் தம்பதி கடந்த வாரம் தங்களது குழந்தைகளான 7 வயது ஆர்ச்சி மற்றும் 5 வயது லிலிபெட் இருவரையும் புதிய கல்வி நிலையத்தில் சேர்த்தனர்.
குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றிய சசெக்ஸ் தம்பதி
இந்நிலையில் பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் பள்ளிக்கு செல்வதற்கான நீண்ட தூரம் மற்றும் போக்குவரத்து சவால்கள் காரணமாக சசெக்ஸ் தம்பதி தங்களது குழந்தைகளை புதிய கல்வி நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.
சசெக்ஸ் தம்பதியினரின் தற்போதைய இருப்பிடம் மற்றும் பள்ளிகளின் விவரங்கள் ஆகியவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
தினசரி நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு மட்டுமே இந்த மாற்றம் மேற்கொண்டு இருப்பதாகவும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அர்ப்பணிக்கு சசெக்ஸ் தம்பதி நன்றி தெரிவித்து இருப்பதாக மேகனின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றம் முந்தைய பள்ளியின் தரத்தையோ அல்லது கவனிப்பு குறையையோ மதிப்பிடுவதற்கானது இல்லை என்பதையும் தம்பதி தெளிவுபடுத்தியுள்ளது.