அமெரிக்காவிலுள்ள வீட்டிலிருந்து இளவரசர் ஹரி மேகன் தம்பதியர் வெளியேற அவசர உத்தரவு
ஹரி மேகன் குடும்பம், அமெரிக்காவில் தாங்கள் வாழும் வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் அமைந்துள்ள Montecito என்னும் நகரில், இளவரசர் ஹரி, தொலைக்காட்சி பிரபலங்களான எலென், கிம் கார்டேஷியன் முதலான பல பிரபலங்கள் வாழ்கிறார்கள்.
வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு
Montecito பகுதி, திடீர் மழை, புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 10 நாட்களில் அப்பகுதியில் வாழும் 12 பேர் வரை மோசமான வானிலை காரணமாக உயிரிழந்துள்ளார்கள். எனவே, அப்பகுதியில் வாழும் 90 சதவிகிதத்தினரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
@Chris Jackson/Getty Images
ஹரி மேகன் தம்பதியர் வெளியேற அவசர உத்தரவு
Montecito நகரில்தான் இளவரசர் ஹரியும் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். எனவே, ஹரி, மேகன் குடும்பமும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு தீயணைப்புத்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
@ MEGA