ஆசையுடன் ஹரி மேகன் தம்பதியரை சந்திக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர்: காத்திருந்த ஏமாற்றம்
ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறி இளவரசர் ஹரியும் மேகனும் அமெரிக்காவில் குடியேறிய நிலையில், அவரை வரவேற்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தான் சந்தித்த ஏமாற்றத்தைக் குறித்து பேசியுள்ளார்.
தம்பதியரை வரவேற்கச் சென்ற நபர்
2020ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கல்போர்னியாவிலுள்ள Montecito என்னுமிடத்தில் அமைந்துள்ள மாளிகை ஒன்றிற்கு குடிபுகுந்துள்ளார்கள் ஹரியும் மேகனும்.
அப்போது, அவர்களுடைய வீட்டுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த Frank McGinity (88) என்னும் அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், தம்பதியரை வரவேற்பதற்காக பரிசுப்பொருள் ஒன்றுடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
Photo by TIMOTHY A. CLARY / AFP)(AFP)
வரவேற்கச் சென்றவருக்கு காத்திருந்த ஏமாற்றம்
ஆனால், அவர்கள் தன்னை சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார் Frank. ஆவலுடன் சென்ற தன்னைத் தடுத்து நிறுத்திய பாதுகாவலர், தயவு செய்து வெளியே செல்லுங்கள் என்று கூறிவிட்டாராம்.
அந்த பரிசுப்பொருளைக் கூட கையில் வாங்காத அந்த பாதுகாவலர், அவர்களுக்கு உங்களை சந்திப்பதில் ஆர்வமில்லை என்று கூறி, தன்னைத் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார் Frank.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |