சார்லஸ் மன்னருக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த இளவரசர் ஹரி: திட்டத்தில் அதிரடி மாற்றம்
அடுத்த மாதம் பிரித்தானியாவுக்கு வருகைதரும்போது இளவரசர் ஹரிக்கு பாதுகாப்பு வழங்கப்படாது; இதனால் மேகன், ஆர்ச்சி மற்றும் லில்லிபெட் ஆகியோரை அவர் அழைத்து வருவாரா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
நிச்சயமற்ற தன்மை
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தருவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, பாதுகாப்பு கோரும் இளவரசர் ஹரியின் விண்ணப்பங்களை ரோயல் மற்றும் விஐபி நிர்வாகக் குழு (RAVEC) நிராகரித்துள்ளது.

இளவரசர் ஹரி இந்த ஒரு வார காலப் பயணத்தின்போது தனது மனைவி மேகன் மற்றும் இரண்டு பிள்ளைகளைத் தன்னுடன் பிரித்தானியாவிற்கு அழைத்து வர விரும்புகிறார்; அவர்கள் மன்னரைச் சந்திக்கவும், இளவரசி டயானாவின் நினைவிடத்தைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.
தற்போதைய சூழலில் ஹரி மட்டுமே வருவது உறுதியாகியுள்ளது. ஆனால் RAVEC-இன் முடிவைத் தொடர்ந்து, மேகன் மற்றும் பிள்ளைகளின் வருகை குறித்த விடயத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதுடன், அது மறுஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது.
தனக்கான 24 மணி நேரப் பாதுகாப்பு வசதியை மீண்டும் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தில் ஹரி தொடர்ந்த வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தை விவாதிக்க ஒரு 'இடர் மேலாண்மைக் குழு' (Risk Management Board) கூட்டப்படவிருந்த தகவல் முன்னர் வெளியானது.
ஆனால், இளவரசர் ஹரி தொடர்பில் எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை என்று நம்பப்படுகிறது; எனவே, பாதுகாப்பு எதுவும் வழங்கப்படாது என்று RAVEC தற்போது முடிவு செய்துள்ளது.
இதனிடையே, ஹரி மற்றும் அவரது குடும்பத்தினர் அரச குடும்பத்து மாளிகை ஒன்றில் (இது பக்கிங்ஹாம் அரண்மனையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது) தங்குவதற்கான மன்னரின் அழைப்பு இன்னும் பரிசீலனையில் உள்ளது.
அனைத்தையும் அவர் செய்வார்
இளவரசர் ஹரி அடுத்த மாதம் மேகன், ஆர்ச்சி மற்றும் லில்லிபெட் ஆகியோரை பிரித்தானியாவிற்கு அழைத்து வருவார் என்று சசெக்ஸ் தம்பதியினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்திய வெறும் 24 மணி நேரத்திற்குப் பிறகு பாதுகாப்பு குறித்த இந்த முடிவு வெளியாகியுள்ளது.
ஹரி தனது பிள்ளைகளை மன்னரைச் சந்திக்க அழைத்துச் செல்ல விரும்புவதாகத் தெரியவருகிறது. இதனிடையே, ஹரி தற்போது உருவாகியுள்ள இந்த நெருக்கடிகளை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்.

இறுதியில், அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான வழியைக் கண்டறிய தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்வார் என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
மட்டுமின்றி, ஹரியின் பிள்ளைகள் இருவரும் இதுவரை இளவரசி டயானாவின் கல்லறையைப் பார்வையிட்டதில்லை. 2022ல் ஹரியும் மேகனும் அந்தக் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |