லசித் மலிங்காவின் இமாலய சாதனையை தூளாக நொறுக்கிய ஐதராபாத் வீரர்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ஹர்ஷல் படேல், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை படைத்தார்.
ஹர்ஷல் படேல் சாதனை
ஐபிஎல் 2025 தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் ஆடிய லக்னோ அணி 205 ஓட்டங்கள் எடுக்க, சன்ரைசர்ஸ் 206 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் SRH வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் (Harshal Patel) ஒரு விக்கெட் வீழ்த்தினார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது 150வது விக்கெட் ஆகும்.
இதன்மூலம் அதிவிரைவாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய லசித் மலிங்காவின் (Lasith Malinga) சாதனையை ஹர்ஷல் படேல் முறியடித்தார்.
மலிங்கா 2,444 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், ஹர்ஷல் படேல் 2,381 பந்துகளிலேயே வீழ்த்திவிட்டார்.
ஹர்ஷல் படேல் இதுவரை 117 போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/27 ஆகும்.
ஐபிஎல்லில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
- ஹர்ஷல் படேல் - 2,381 பந்துகள்
- லசித் மலிங்கா - 2,444 பந்துகள்
- யுஸ்வேந்திர சாஹல் - 2,543 பந்துகள்
- டிவைன் பிராவோ - 2,656 பந்துகள்
- ஜஸ்பிரித் பும்ரா - 2,832 பந்துகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |