அமெரிக்க அணிக்கு எதிராக பறந்த சிக்ஸர்கள்! முதல் சர்வதேச அரைசதம் விளாசிய ஹர்ஷித் கௌஷிக்
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமீரக வீரர் ஹர்ஷித் கௌஷிக் 53 ஓட்டங்கள் விளாசினார்.
அமெரிக்க அணி பந்துவீச்சு
துபாயில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. 
நாணய சுழற்சியில் வென்று அமெரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அமீரக அணியில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும் அணித்தலைவர் ராகுல் சோப்ரா 36 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த ஷோயிப் கான் 28 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஹர்ஷித் கௌஷிக் அபாரம்
முகம்மது ஷாதாத் 34 ஓட்டங்களும், முகம்மது வசீம் 21 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, ஹர்ஷித் கௌஷிக் (Harshit Kaushik) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவர் 54 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 53 ஓட்டங்கள் குவிக்க, அமீரக அணி 9 விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் எடுத்தது.
அமெரிக்க அணியின் தரப்பில் சவுரப் நெத்ரவல்கர் 3 விக்கெட்டுகளும், ஜஸ்தீப் சிங் மற்றும் ஷுபம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |