அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்தை அலறவிட்ட இந்திய பந்துவீச்சாளர்
இங்கிலாந்து எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.
ஹர்ஷித் ராணா
நாக்பூரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா இந்திய அணியில் அறிமுகமாகினர். முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 248 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
3 விக்கெட்டுகள்
பட்லர் 52 ஓட்டங்களும், பெத்தெல் 51 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணியின் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பென் டக்கெட்டை முதலில் வீழ்த்திய அவர், ஹாரி புரூக்கை டக்அவுட்டாக்கினார். பின்னர் அதிரடி வீரர் லிவிங்ஸ்டனை 5 ஓட்டங்களில் வெளியேற்றினார். அதேபோல் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |