ஆசிரியர்கள் வேலைக்கு வேட்டு வைக்கும் AI Chat GPT: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆசிரியராக நியமிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் AI
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாக பேசி வரும் நிலையில், இது மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பறித்து விடும் என்ற பயமும் மக்களிடம் பரவி வருகிறது.
இந்த பயத்தை உண்மையாக்கும் வகையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது.
Getty
ஹார்வார்டு பல்கலைக்கழகம் தங்களுடைய கணினியியல் துறை பாடப்பிரிவுக்கு AI ChatGPT எனப்படும் சாட்பாட் ஒன்றை ஆசிரியராக நியமிக்க திட்டமிட்டு வருகிறது.
இதற்காக ஓபன் ஏஐ நிறுவனத்தின் அதிநவீன Chat GPT 3.5 அல்லது ChatGPT 4 மாடல்களை தழுவி ஏஐ சாட்பாட் உருவாக்கப்படும் என இது தொடர்பான திட்டமிடல் பணியில் ஈடுபட்டு வரும் விரிவுரையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
1:1 என்ற விகிதத்தில் நியமிக்க முடிவு
மேலும் இது தொடர்பாக வெளியான தகவலில், பல்கலைக்கழகத்தில் உள்ள கணினியியல் துறையின் பாடப்பிரிவு ஒன்றுக்கு 1:1 என்ற கணக்கில் மாணவர்:ஏஐ மென்பொருள் ஆசிரியர் என்ற விகிதம் வழங்கப்பட இருக்கிறது.
Getty
இவை மாணவர்களுடன் 24/7 என்ற கணக்கில் செயல்படுவதுடன் இவை மாணவர்களுக்கு சிறப்பான முறையில் உதவும் என நம்புவதாக கணினி துறையின் பேராசிரியர் டேவிட் மலன் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் இந்த AI ChatGPT எனப்படும் சாட்பாட் ஆசிரியர் பணி அமர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |