அழகான பெண் பிள்ளைகளை பிடிக்காது: இளம்பெண் செய்த பயங்கர செயல்கள்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தன் சொந்த மகன் உட்பட நான்கு சிறுபிள்ளைகளைக் கொன்ற இளம்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களை கொலை செய்ததற்காக அவர் கூறியுள்ள காரணம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
நான்கு சிறுபிள்ளைகளைக் கொன்ற இளம்பெண்
ஹரியானா மாநிலத்திலுள்ள பானிபட் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் பூனம் (32). கடந்த இரண்டு ஆண்டுகளில், தனது உறவினர்களான மூன்று சிறுமிகளைக் கொலை செய்துள்ளார் பூனம்.

2023ஆம் ஆண்டு, தன் கணவரின் சகோதரியின் மகளான 9 வயது சிறுமியை, தண்ணீர்த் தொட்டிக்குள் அமிழ்த்திக் கொன்றுள்ளார் பூனம்.
சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தன் சொந்த மகனான சுபம் என்னும் மூன்று வயது சிறுவனையும் கொலை செய்துள்ளார் அவர்.
இந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு ஆகத்து மாதம், தன் சகோதரி முறை கொண்ட ஒரு பெண்ணின் ஆறு வயது மகளைத் தண்ணீர்த் தொட்டி ஒன்றிற்குள் அமிழ்த்திக் கொன்றுள்ளார் பூனம்.
கடைசியாக, தனது சகோதரர் மகளான ஆறு வயது சிறுமியின் தலையை தண்ணீர்த் தொட்டி ஒன்றிற்குள் அமிழ்த்திக் கொன்றுள்ளார் பூனம்.

அந்தச் சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்கும்போதுதான், அவள் உட்பட ஏற்கனவே மூன்று சிறுமிகளை பூனம் கொன்றது தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், ஏன் அந்தச் சிறுமிகளை பூனம் கொன்றார் என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் எரிச்சலூட்டுவதாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் அமைந்துள்ளது.
ஆம், அந்தச் சிறுமிகள் வளர்ந்தால், அவர்கள் தன்னைவிட அழகாக ஆகிவிடுவார்கள் என்பதாலேயே தான் அவர்களைக் கொன்றதாக பூனம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பூனமிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |