முதல் சர்வதேச போட்டியிலேயே முத்திரை பதித்த பாகிஸ்தான் வீரர்! அதிரடியில் மிரட்டல் வெற்றி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எவின் லீவிஸ் 60 ஓட்டங்கள்
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ட்ரினிடாட்டில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49 ஓவர்களில் 280 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
எவின் லீவிஸ் 60 ஓட்டங்களும், ஷாய் ஹோப் 55 ஓட்டங்களும், ரோஸ்டோன் சேஸ் 53 ஓட்டங்களும் விளாசினர். ஷஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஹசன் நவாஸ் அதிரடி
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாம் 47 ஓட்டங்களும், முகமது ரிஸ்வான் 53 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
அறிமுக வீரரான ஹசன் நவாஸ் (Hasan Nawaz) ஆட்டமிழக்காமல் அதிரடியாக 54 பந்துகளில் 63 ஓட்டங்கள் குவித்தார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹுசைன் தலத் 41 (37) ஓட்டங்கள் விளாச, பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 284 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |