வனிந்து ஹசரங்கா வீசிய கூக்ளி பந்தில் சிதறிய ஸ்டெம்ப்! வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவை பெங்களூர் அணி வீழ்த்திய நிலையில் ஹசரங்கா அபாரமாக எடுத்த விக்கெட்டின் வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி த்ரில் வெற்றியை பெற்றது.
இப்போட்டியில் பெங்களூர் அணி வெற்றிக்கு முக்கிய காரணம் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா தான்.
#SheldonJackson #WaninduHasaranga with a superb googly! pic.twitter.com/uetcnImoRM
— Sports Hustle (@SportsHustle3) March 30, 2022
ஏலத்தில் ரூ 10.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஹசரங்கா தனது பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.
4 ஓவர்கள் வீசிய ஹசரங்கா 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதிலும் கொல்கத்தா வீரர் ஷெல்டன் ஜேக்சனுக்கு கூக்ளி பந்தை வீசினார் ஹசரங்கா.
இதில் திணறிய ஷெல்டன் கிளீன் போல்ட் ஆனார். அதிலும் பந்தானது ஸ்டெம்பையே கீழே சாய்த்தது.
இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.