விக்கெட் எடுத்தபோது அப்படி கொண்டாடியது ஏன்? CSKவை சம்பவம் செய்த ஹசரங்கா கூறிய காரணம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வனிந்து ஹசரங்கா, விக்கெட்டுகளை வீழ்த்தியபோது கொண்டாடிய விதம் குறித்து பேசியுள்ளார்.
வனிந்து ஹசரங்கா அபாரம்
கவுகாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் CSK அணியை வீழ்த்தியது.
ராஜஸ்தான் அணியில் விளையாடிய இலங்கையின் வனிந்து ஹசரங்கா, சென்னை அணியின் முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
4 ஓவர்கள் வீசிய வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) 35 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் ஸ்டைல் செய்து கொண்டாடினார்.
Hasaranga about the iconic gesture from #Pushpa movie. #AlluArjun #RRvCSKpic.twitter.com/GXaLyDJdPI https://t.co/GzjtYIt1On
— Telugu Chitraalu (@TeluguChitraalu) March 30, 2025
நல்ல பந்துவீச்சு தாக்குதல்
ஏன் அப்படி கொண்டாடினேன் என்று கூறுகையில், "நான் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அதனால்தான் சிறந்த வீரரான ருதுராஜின் விக்கெட்டை வீழ்த்தியபோது 'புஷ்பா' பட பாணியில் கொண்டாடினேன்" என்றார்.
மேலும் தனது பந்துவீச்சு குறித்து அவர் கூறுகையில், "நான் என்னுடைய அடிப்படை விடயங்களைச் செய்ய முயற்சித்தேன், ஸ்டம்புகளை நோக்கி வீச முயற்சித்தேன். இறுதியில் வைட் பந்துவீச முயற்சித்தேன். எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் முதல் இன்னிங்சில் மிகவும் நன்றாக துடுப்பாட்டம் செய்தனர்.
விக்கெட் எப்படி இருந்தது என்பதைப் பார்த்தோம். எங்களுக்கு உண்மையிலேயே நல்ல பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. குறிப்பாக நடுவில், நானும் மஹீஷும்; எங்களுக்கு விளையாட வித்தியாசமான ரோல்கள் உள்ளன" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |