ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி குற்றங்கள் பல மடங்கு அதிகரிப்பு! வெளியான ஆய்வறிக்கை..
ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அமெரிக்காவில் கடந்த ஆண்டு பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
வெறுக்கத்தக்க குற்றத் தரவுகளைத் தொகுத்த, வெறுப்பு மற்றும் தீவிரவாத ஆய்வு மையம் (The Center for the Study of Hate and Extremism), அமெரிக்காவில் 2020-ஆம் ஆண்டை விட 2021-ஆம் ஆண்டில் ஆசிய எதிர்ப்பு உணர்வு 339 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
பெரும்பாலான நகரங்களில் கறுப்பின அமெரிக்கர்கள் மிகவும் இலக்கு வைக்கப்பட்ட குழுவாக இருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகியவை வெறுப்புக் குற்றங்களில் 2020-ன் சாதனையை முறியடித்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
மேலும் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் சுமார் ஒரு டஜன் வெறுப்பு குற்றங்களில் ஒட்டுமொத்தமாக 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, நியூயார்க் நகரத்தில் வெறுப்பு குற்றச் சம்பவங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. 2020-ல் 30-ஆக இருந்த ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள் 2021-ல் 133 ஆக உயர்ந்தது, இது 343 சதவீதம் அதிகரித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோவும் ஒரு பெரிய ஸ்பைக்கைப் பதிவு செய்துள்ளது. அங்கு 9-ஆக இருந்த குற்றங்கள் 60-ஆக அதிகரித்துள்ளது, இது 567 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.
அதேபோல், லாஸ் ஏஞ்சல்ஸில் 173 சதவிகிதம் உயர்வைக் கொண்டுள்ளது.
ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்களின் அதிகரிப்பு கோவிட் தொற்றுநோயால் தூண்டப்பட்ட இனவெறியுடன் நேரடியாக தொடர்புடையது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆசிய அமெரிக்கர்களைத் தவிர, பிற சிறுபான்மை சமூகங்களும் அவர்களுக்கு எதிராக வெறுப்பை அதிகமாக எதிர்கொண்து வருகின்றனர்.
அறிக்கையின்படி, நியூயார்க்கில், யூத சமூகம் கடந்த ஆண்டு மிகவும் வெறுப்பூட்டும் குற்றங்களைப் புகாரளித்ததுள்ளது.
அதேபோல் சிகாகோவில், ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் குறிவைக்கப்பட்டனர்.
மார்ச் 2020 மற்றும் செப்டம்பர் 2021-க்கு இடையில், Stop AAPI Hate எனும் இலாப நோக்கற்ற அமைப்பால் சுமார் 10,370 வெறுப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.