பேய் என்றால் உங்களுக்கு அல்லு கெளம்புமா? கொஞ்சம் இதை கேளுங்க.. அமெரிக்காவில் 'Conjuring' வீடு விற்பனைக்கு!
பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படமான 'The Conjuring' எடுக்க தூண்டுகோலாய் அமைந்த வீடு விற்பனைக்கு வந்துள்ளது.
'அமெரிக்காவில் மிகவும் பேய் பிடித்த வீடுகளில் ஒன்று' என்று கூறப்படும் இந்த வீட்டுக்கு 1.2 மில்லியன் டொலர் (£ 878,000) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The Conjuring திகில் திரைப்படம், 2013-ல் வெளியானது. ஒரு வீட்டில் ஏற்படும் திகில் அனுபவங்கள் அடிப்படையில் படமாக்கப்பட்ட அந்தத் திரைப்படம், உலகின் சிறந்தத் திகில் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
Picture: Bill Brock
தற்போது விற்பனைக்கு வந்துள்ள வீடு, திரைப் படத்தில் இடம்பெற்ற வீட்டைப் போன்று பல பயங்கரமான நிகழ்வுகளைச் சந்தித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த ரோட் தீவு பண்ணை வீடு (Rhode Island farmhouse), அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பேய் வீடுகளில் ஒன்று.
1800-களில் அந்த வீட்டில் பாத்ஷேபா ஷெர்மன்(Bathsheba Sherman) என்பவர் வசித்தார். 1970களில், அங்கு பெரான் (Perron) குடும்பத்தினர் வாழ்ந்தனர்.
Ben Guglielmi, The Blackstone Team via Realtor.com
அவர்கள் அனுபவத்த மிகவும் பயங்கரமான சம்பவங்களின் அடிப்படையில் The Conjuring திரைப்படம் எடுக்கப்பட்டது. 2019-ல் அந்த வீடு 439,000 டொலருக்கு விற்கப்பட்டது.
நிஜவாழ்க்கையில் அமானுஷ்ய புலனாய்வாளர்கள் (paranormal investigators) அந்த வீட்டை வாங்கினார்கள். அங்கு அவர்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இதுவரை, உரிமையாளர்கள் அந்த வீட்டில் பேய்கள் பற்றி எந்தப் புகாரும் கொடுத்ததில்லை.
இந்நிலையில், அந்த வீடு விற்பனைக்கு வந்துள்ளது. பேய்களை நினைத்து பயமில்லாதவர்கள் அந்த வீட்டை தாராளமாக வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Picture Below: New Line Cinema/Cory Heinzen/Facebook
