உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்: தமிழ்நாடு முதல்வர் வலியுறுத்தல்
புதுமணத் தம்பதிகள் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்
நடந்தது என்னவென்றால், திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப்பேசும்போது, முன்பெல்லாம், திருமணம் செய்துகொண்ட உடன் குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள், நன்கு திட்டமிட்டு அளவோடு பெற்று வளமாக வாழுங்கள் என்று நான் கூறுவதுண்டு.
ஆனால், இப்போது தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆகவே, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதுடன், அவர்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர்களை சூட்டுங்கள் என கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு முதல்வர் இவ்வாறு கூறியதன் பின்னணி என்னவென்றால், மத்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது.
அப்படி நடந்தால், மக்கள்தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் அபாயம் உள்ளது.
ஆகவேதான், உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என தமிழ்நாடு முதல்வர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |