அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்.., வயதானவர்கள் அதிகரிப்பால் சந்திரபாபு நாயுடு அறிவுரை
வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு அறிவுரை
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, "தேசிய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த 1950-களில் 6.2 சதவீதமாக அதிகரித்தது. இந்த வளர்ச்சி விகிதமானது 2021 -ம் ஆண்டில் 2.1 சதவீதமாக குறைந்தது.
ஆந்திர மாநிலத்தில் இந்த வளர்ச்சி விகிதமாது 1.6 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரு குடும்பத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பது மக்கள் தொகை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதனை ஈடுகட்ட தம்பதியினர் அனைவரும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்வது அவசியம். அதிக குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க பரிசீலித்து வருகிறோம்.
அதோடு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற முந்தைய சட்டத்தை ரத்து செய்துள்ளோம்.
மேலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |