யானையை உண்ணும் நீர்யானைகளைப் பார்த்திருக்கிறீர்களா? வெளியாகியுள்ள அபூர்வ புகைப்படங்கள்!
தாவரங்களை மட்டுமே உண்ணும் சுத்த சைவம் என கருதப்படும் நீர் யானைகள், யானையின் உடலை சுவைக்கும் அபூர்வ புகைப்படங்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்... அந்த பழமொழி மனிதர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்திருந்தோம். ஆனால், விலங்குகளும் அதற்கு விதி விலக்கல்ல என்பதை நிரூபிக்கும் ஒரு அசாதாரண விடயம் நிகழ்ந்துள்ளது.
ஆம், பசியில், இறந்த யானை ஒன்றை நீர் யானைகள் சுவைப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
தென்னாப்பிரிக்காவிலுள்ள போட்ஸ்வானாவில் அமைந்துள்ள Chobe நதிக்குச் சென்றுள்ளார் Brice Petit (42) என்ற புகைப்படக் கலைஞர்.
அப்போது ஓரிடத்தில், கழுகுகள் வானில் பறந்துகொண்டிருக்க, அங்கே தன் கமெராவுக்கு தீனி கிடைக்கும் என்று எண்ணிய Brice அங்கு சென்றிருக்கிறார்.
அங்கு அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், ஒரு கூட்டம் நீர்யானைகள், இறந்து கிடக்கும் யானை ஒன்றை, நாவில் எச்சில் ஊற சுற்றி வரும் காட்சியை அவர் கண்டுள்ளார்.
பொதுவாக, யானைகள் உண்ணும் தாவரங்களில் 70 சதவிதம் ஜீரணம் ஆகாமலே அவற்றின் வயிற்றுக்குள் இருக்குமாம். யானைகள் உயிரிழக்கும் பட்சத்தில், அவற்றின் உடல் அழுகத் துவங்கும்போது, இந்த தாவரங்கள் வெளிப்படுமாம். அந்த தாவரங்களை, தாவர உண்ணிகள் உண்ணுவது சாதாரணமான நிகழ்வுதானாம்.
ஆனால், இந்த யானையைப் பொருத்தவரை, அது சமீபத்தில்தான் இறந்துள்ளது. அதன் உடல் அழுகவும் இல்லை. ஆனாலும், பசியில் அந்த நீர் யானைகள் அந்த யானையைக் கடித்து, அதன் வயிற்றைக் கிழித்து, அதற்குள் இருக்கும் தாவர உணவை உண்ண முயன்றிருக்கலாம் என்கிறார் Brice.
ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், ஒரு நீர்யானை, இறந்து கிடந்த யானையின் துதிக்கையை வாயில் வைத்து மெல்ல முயன்றதுதான்!