உங்கள் வீட்டில் இந்த திசையில் தும்புத்தடி வைத்துளீர்களா? : வீட்டில் வறுமை ஏற்படுமாம்!!
வாஸ்து பார்த்து எதும் செய்வது எங்களது வழக்கமாகும்.
ஒருவர் வீடுக் கட்டும்போதுகூட வாஸ்து பார்த்து தான் கட்டுவார்கள். அவ்வாறு வீடுக் கட்டவில்லை என்றால் வீட்டில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.
அந்த வகையில் வீட்டில் வாஸ்துபடி பொருட்கள் வைக்கவில்லை என்றாலும் வீட்டில் வறுமை ஏற்படும் என்பது முன்னோர்களின் கருத்தாகும்.
அனைவரது வீட்டிலும் பொதுவாக இருக்கும் பொருள் தும்புத்ததடி. இதையும் வாஸத்து பார்த்து தான் வைக்க வேண்டுமென்றால் நம்புவீர்களா?
தும்பித்தடியில் தான் லட்சுமி தேவி தங்கியுள்ளார்.
அதை வைத்து வீட்டை துப்பபரவு செய்தாலும் அதில் தான் லட்சுமி இருகின்றார்.
இப்படிப்பட்ட தும்புத்தடியை நாங்கள் நினைத்த இடத்தில் வைக்க இயலாது. அவ்வாறு வைத்தால் வீட்டில் இருக்கும் செல்வம் அழிந்து போகும் என்பார்கள்.
தும்புத்தடியை வீட்டில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
- உடைந்து போன தும்புத்தடியை பயன்படுத்தக் கூடாது. அப்படி ஒரு முறை உடைந்ததை பயன்படுத்தினால் வீட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.
- தும்புத்தடியில் லட்சுமி தங்கியிருக்கிறாள் என்று விலையுயர்ந்த பொருட்கள் வைக்கும் இடங்களில் வைக்க கூடாது. அவ்வாறு செய்தால் வறுமை ஏற்படும்.
- தும்புத்தடியை நிறுத்தி வைக்க கூடாது. அவ்வாறு இருந்தால் அது தவறான சகுணமாகும். படுக்க வைத்திருந்தால் வீட்டில் இருக்கும் செல்வத்திற்கு குறையிருக்காது.
- இரவு நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் வீட்டை துப்பரவு செய்ய கூடாது. அப்படி செய்தாலும் குப்பையை வெளியே போட கூடாது. இதனால் லட்சுமி தேவி கோபம் அடைவார் என்று கருத்து கூறப்படகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி,
தும்புத்தடியை எப்போதும் தென்மேற்கு மூளை அல்லது மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். இதற்கு மாறாக வேறு திசையில் வைத்தால் அது வீட்டின் கஷ்டத்தை ஏற்படுத்தும். வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்த்தை தடுக்கும்.
ஆகவே தும்புத்தடியை ஒழுங்கான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.